fbpx
Homeபிற செய்திகள்அரசு பள்ளிக்கு பெஞ்சுகள், டெஸ்க்குகள் வழங்கும் விழா

அரசு பள்ளிக்கு பெஞ்சுகள், டெஸ்க்குகள் வழங்கும் விழா

காரமடை ஊராட்சி ஒன்றியம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சுதந்திராபுரம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பாட்டுக்கு பெஞ்ச் டெஸ்க்குகள் வழங்கப்பட்டன. இதற்கான விழா காரமடை வட்டாரக்கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் மணிமலர் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் முத்துசங்கையா, திலகவதி, ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் வளர்மதி, உறுப்பினர் அருண்குமார், விக்னேஷ் ,சமூகப் பணியாளர் ஆர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இவ்விழாவில் நன்கொடையாளர்கள் ஏ.வி.ராமசாமி (நேசனல் பள்ளி நிர்வாக அலுவலர்), காஜாமைதீன், பாலாமணி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாபு இராபர்ட், வசந்தாமணி, பொறியாளர் முகமது நவாஸ், ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் கங்கா பழனிச்சாமி, திருப்பூர் முத்துசாமி, மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர் ஜெயராமன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள்.

பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி ஆசிரியர் கொடிமலர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img