கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம், பிரபு நகரில் ரூ.27.4 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நவீன கழிவறை கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர் சேகர், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் ஹரிபிரசாத், ராஜேஸ்வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.