கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.டி.ஆடிடோரியத்தில் கோவை மாநகராட்சி மற்றும் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இணைந்து வடக்கு மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனையை பார்வையிட்டனர்.
உடன் மண்டல தலைவர்கள் கதிர்வேல், மீனாலோகு, பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், மாமன்ற உறுப்பினர்கள் அன்னக்கொடி, கதிர்வே-லுசாமி, உதவி ஆணையர்கள் மகேஷ்கனகராஜ், மோகனசுந்தரி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ், ஜி.கே.என்.எம்.மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் உள்ளனர்.



