கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வழியாம்பாளையம் பகுதிகளில் ரூ.18.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மழைநீர் வடிகால் இடத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், உதவி ஆணையர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் குமார், திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



