fbpx
Homeபிற செய்திகள்பாங்க் ஆப் பரோடா சார்பில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு 15 நாளில் ரூ.134 கோடி கடனுதவி

பாங்க் ஆப் பரோடா சார்பில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு 15 நாளில் ரூ.134 கோடி கடனுதவி

பாங்க் ஆஃப் பரோடா சார்பில் நடந்த 15 நாள் உழவர் திருவிழாவின் போது, 134 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனுதவியை 20,000-க்கும் அதிகமான விவசாயிக ளுக்கு வங்கி வழங்கியது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா நவ.15-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நாடு தழுவிய வருடாந்திர விவசாயிகளின் நலத்திட் டமான ‘பரோடா கிசான் பக்வாடா’ வின் 5-வது பதிப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சந்திப்புகள், சந்திப்பு அமைவிடங்கள், மண் பரிசோதனை முகாம் கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை வங்கி ஏற்பாடு செய்திருந்தது. 15 நாள் உழவர் திருவி ழாவின் போது, 134 கோடி ரூபாய்க்குக்கும் அதிகமான கடனுதவியை 20,000-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு வங்கி வழங்கியது.

‘பரோடா கிசான் பக் வாடா’

விவசாய சமூகத்துடனான வங்கியின் ஈடுபாட்டை அதிகரிக்கவும், பாங்க் ஆஃப் பரோடாவின் பல்வேறு வேளாண் வழங்கல்கள், திட்டங்கள் மற்றும் வழங்கல் வழி முறைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் உருவாக்க உதவும் வகையில் ‘பரோடா கிசான் பக் வாடா’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிறைவு நாளில் பாங்க் ஆஃப் பரோடாவின் பொது மேலாளர் மற்றும் சென்னை மண்டலத் தலைவர் அ. சரவணக் குமார் பேசியதாவது:
தமிழகத்தில் அதிகளவு எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் மற்றும் அவர்களுக்கு வாழ் வாதாரத்தை வழங்கு வதிலும் விவசாயம் முக்கியமான துறையாக விளங்குகிறது.

விவசாய சமூக மக்களை அணுகி, தேவையான விவரங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி அவர்களுக்கான பல்வேறு வகை விவசாயக் கடன்கள், வங்கிச் சேவைகள் மற்றும் அரசாங்கத்தால் தொடங்கப்படும் விவசாய முயற்சிகள் குறித்து அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்

2022-ம் ஆண்டு செப்டம்பர் 30 நிலவரப்படி தமிழ்நாட்டில், பாங்க் ஆஃப் பரோடா 314 கிளைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

அவற்றில் 161 கிளைகள் பகுதியளவு நகர்ப்புற/கிராமப்புறக் கிளைகளாகும். 2022-ம் ஆண்டு செப்டம்பர் 30 தேதி வரை தமிழ்நாட்டில் விவசாயத் துறைக்கான கடன் உதவிகள் ரூ.7,800 கோடியாக உயர்ந்துள்ளது.

பாங்க் ஆஃப் பரோடாவில் விவசாயக் கடனுதவிக்கு விண்ணப்பிக்க, வாடிக்கையாளர்கள்- வலைத் தளத்திற்கு செல்லலாம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img