கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதியில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது
கோவை தடாகம் சாலை, சிவாஜி காலனி பகுதியில் செயல்பட்டு வரும், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலை மையில் அவரது அலுவலகத்தில் அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மௌன அஞ்சலி
இதில் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அம்பேத்கரின் நினைவை போற்றும் விதமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அறிவொளி செந்தில், 35 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால், 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், மற்றும் சுடர் மணி, சந்தானகுமார், பைரவ சித்திரம்மாள், காயத்ரி, வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் லட்சுமி, தேவராஜ், மற்றும் நிர்வாகிகள் மோகன் ராஜா, வர்ஷா, வர்ஷினி, ஜெபா, கனகராஜ், கணேசன், சட்டக்கல்லூரி மாணவர் சதாசிவம், முன்னாள் காவலர் பாபு, பூசாரிபாளையம் ஜெகநாதன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.