fbpx
Homeபிற செய்திகள்கோவையில் விசாலமான அலுவலகத்தில் கோவை.கோ நிறுவனம் விரிவாக்கம்

கோவையில் விசாலமான அலுவலகத்தில் கோவை.கோ நிறுவனம் விரிவாக்கம்

கோவை.கோ நிறுவனம் இந்தியாவில் கோவை, இங்கிலாந்தின் லண்டன் ஆகிய இடங்களில் உள்ள முதன்மையான மென்பொருள் மற்றும் பி2பி சாஸ் நிறுவனம், கோவையில் 4,500 சதுர அடி அலுவலக இடத்தைத் திறந்துள்ளது.

விழாவில் கிஸ்ஃப்ளோவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் கூறியதாவது: வளர்ந்து வரும் தொழில் துறைகளின் சாப்ட் வேர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் சாஸ் யுனிகார்ன் நிறுவனத்தை 2030-ம் ஆண்டுக்குள் கோவையின் சிறந்த நிறுவனமாக உயர்த்துவதே நோக்கம் என்றார்.

கோவை டாட் கோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியுமான சரவண குமார் கூறுகையில், தனிப்பட்ட குழுவாக செயல்படுபவர்கள் மற்றும் பங்குதாரர்கள் மனதில் பணிபுரியும் இடத்தில் உள் ளவர்கள் எளிதாக பணியாற்றுவதற்கு தேவையான சூழலை உருவாக்குவோம் என்ற வலுவான நம் பிக்கை உள்ளது.

இந்த அலுவலகத்தை பார்க்கும் போது கோவை டாட் கோ நிறுவனம் சிறந்த பொருளை தயாரிக்கும் முடியும் இதன் மூலம் எங்கள் தரத்தை உணர முடியும்.

வாடிக்கையாளர்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளில் எவ்வாறு பொருட்கள் தயார் செய்யப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு இங்குள்ள பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.

எளிமையாகவும் விரைவாகவும் சாஸ் நிறுவனம் பணியாற்றுவதால் தான் இந்தியாவில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணம்.

சர்ன் 360

இது அடுத்த கட்ட நடவடிக்கை தான் சர்ன் 360. வருகின்ற 2030-ம் ஆண்டுக்குள் சாஸ் யூனிகார்ன் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதில் டாக்குமெண்ட் 360, சர்வர்லஸ் 360, மற்றும் சர்ன் 360 ஆகியவை விளங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

நாள்தோறும் பயன்படுத்தபடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சர்ன் 360, டாக்குமெண்ட் 360, சர்வர்லஸ் 360 ஆகியவை சாப்ட்வேர்கள் கோவை.கோ நிறுவனம் வாடிக்கையாளர் மனதில் நிரந்தர இடத்தை பிடிக்கும் பணியாளர்களின் திறமைகளையும் கற்றுக் கொள்ளும் திறமையும் மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்துவதே எங்கள் நோக்கம் இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img