இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கலர் லேப்பான போட்டோ பார்க் டிஜிட்டல் இப்போது எட்டு எச்பி இண்டிகோ பிரஸ்களை கொண்டுள்ளது.
ஃபோட்டோ பார்க் டிஜிட்டல் பிரஸ், இந்தியாவின் தென்பகுதியில் 6 கிளைகளை (கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருநெல்வேலி, திண்டுக்கல், திருவனந் தபுரம், நாகர்கோவில்) கொண்டுள்ளது.
இது ஏற்கனவே எச்பி இண்டிகோ தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான பயனர்களில் ஒன்றாகும். இப்போது இந்தியாவில் முதல்முறையாக இரண்டு புத்தம் புதிய எச்பி இண்டிகோ 7கே பிரஸ்களில் முதலீடு செய்து சமீபத்திய எச்பி இண்டிகோ 7கே பிரஸ்களை பெறும்முதல் வாடிக்கையாளராக ஆனார்கள்.
இந்த புதிய கையகப்படுத்துதலின் மூலம், போட்டோ பார்க் டிஜிட்டல் ஆனது, மொத்தம் எட்டு எச்பி இண்டிகோ பிரஸ்களை கொண்ட எச்பி இண்டிகோ தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பயனர்களாகவும் மாறியுள்ளது.
ஃபோட்டோ பார்க் டிஜிட்டல் நிர்வாக இயக்குநர் ரோஷன் கூறியதாவது:
போட்டோ பார்க் என்பது ‘தரத்தின் சின்னம்’ . இது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் புகைப்படத் துறையின் 25%க்கும் அதிகமான தேவைகளை பூர்த்தி செய்ய எங்களுக்கு உதவியது.
புதிய தொழில்நுட்ப வளர்ச்சியுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையிலும் சேவை செய்ய ஆரம்பித்துள்ளோம். இப்போது எச்பி இண்டிகோ தொழில்நுட்பத்துடன், அச்சு இயந்திரத் துறையில் எங்கள் சேவையை உண்மையான வண்ண அச்சிடும் தீர்வு டன் விரிவுபடுத்தியுள்ளோம்.
இது ஆஃப் செட் பிரிண்டிங் தீர்வுக்கான புதிய மறுவரையறையாகும் என்றார்.
“எச்பி இண்டிகோ 7கே டிஜிட்டல் பிரஸ் மூலம், முடிவற்ற வரம்பற்ற உயர் மதிப்பு பயன்பாடுகளுடன் வரம்பற்ற புதிய வணிக வாய்ப்புகளை வழங்க முடிகிறது.
புதிய டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வணிக அச்சிடும்தேவைகளை வழங்குகிறது” என்று போட்டோ பார்க் டிஜிட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஃபிரான்சிஸ் கூறினார்.
எச்பி இந்தியா நிறுவனத்தின் இண்டிகோ மற்றும் இங்க்ஜெட் பிசினஸ் சொல் யூஷன்ஸ், கன்ட்ரி மேலாளர் அப்பாதுரை கூறுகையில், “புகைப்படம் மற்றும் வணிக அச்சிடும் துறைக்கான எச்பியின் டிஜிட்டல் பிரிண்டிங் பிரஸ்சின் புரட்சியுடன், வாடிக்கையாளர்கள் சந்தையின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய எங்கள் வழங்குதலை புதுமையாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் மேம்படுத்த முடிகிறது” என்றார்.