கோவையில் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில்வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், தொழிலதிபர் சந்தோஷ் குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்
கோவை அருகே துடியலூரில் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் மாவட்ட முழுவதும் இருந்து மாணவ மாணவிகள் மற்றும் ஈரோடு மற்றும் கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் 130 பேர் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு துடியலூர் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், கோவை தொழிலதிபர் சந்தோஷ் குமார் ஆகியோர் கோப்பைகள் வழங்கி பேசினார்கள்
தொழில் அதிபர் சந்தோஷ் குமார் பேசும்போது, “ஸ்கொயர் சாட் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேட்மின்டன் விளையாட்டுப் போட்டி இங்கு மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.
இந்த ஆண்டு இந்த பேட்மின்டன் விளையாட்டுப் போட்டியில் 130 மாணவர்கள் பங்கேற்றதாக கூறினார்கள். அடுத்த முறை இதில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் எண்ணிக்கை 500 ஆக உயர வேண்டும் .
மேலும் இந்த விளையாட்டு போட்டியை மிக சிறப்பான முறையில் நடத்திய இதன் உரிமையாளர்கள் வினோத், மகேஷ், அரவிந்தன் ஆகியோரை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் மேற்கண்டவாறு அவர் கூறினார்.