கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறி வியல் கல்லூரியின் போதைப்பொருள் தடுப்புக்குழுவுடன், மாணவர் மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சுருள் சங்கம், இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய, போதைப்போருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நேற்று (11ம்தேதி) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு கோவை மாநகர வடக்கு கோட்ட துணைக் காவல் ஆணையர் ஜி.சந்தீஷ், சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு பேசும்போது, “போதைப் பொருள் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.
ஒரு முறை அதற்கு அடிமையாகி விட் டால், அதிலிருந்து மீளுவது மிகவும் கடினம். வாழ்க்கை முறையே மாறிவிடும். போதைப் பொருட்களைக் கையாளுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனால் குடும்பத்தில் இருந்து மட்டுமின்றி, சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். போதை யில்லா சமுதாயத்தை உருவாக்க மாண வர்கள் முன்வர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து கோவை மாநகரத் தெற்கு கோட்ட துணைக் காவல் ஆணையர் கே.சண்முகம், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
அவர் பேசும்போது, “இன்று சமூகத்தில் நிகழும் பல்வேறு குற்றங்களுக்குப் போதைப் பொருட்கள் பயன்பாடே முக்கிய காரணமாக விளங்குகிறது. இன்றைய இளைய சமு தாயத்தினர் முன்வந்தால், போதைப் பொருட்கள் பயன்பாட்டை இந்த சமுதாயத்தை விட்டே அகற்றி விட முடியும். போதையில்லா சமுதாயத்தை உருவாக்கி விட முடியும்” என்றார்.
நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.