fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனத்தில் ‘தீக்ஷாரம்பம்’ சேர்க்கைத் திட்டத்தில் புத்தாக்கப் பயிற்சி

அவினாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனத்தில் ‘தீக்ஷாரம்பம்’ சேர்க்கைத் திட்டத்தில் புத்தாக்கப் பயிற்சி

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் இக்கல்வி ஆண்டில் ‘தீக்ஷாரம்பம்’ சேர்க்கைத் திட்டத்தில் 1618 இளங்கலை, 529 முதுகலை மாணவர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது.

புதிய சூழலுக்கு மாணவர்கள் பழகிடவும், நிறுவனத்தின் நெறி முறைகள் மற்றும் கலாச்சாரத்தை அவர்களுக்கு எடுத்துரைக்கவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையான பிணைப்பை உருவாக்கவும், தேசத்தைக் கட்டமைக்கவும், சுய ஆய்வு பற்றிய பெரிய நோக்கத்தின் உணர்வை அவர்களுக்கு வெளிப்படுத்தவும் மாணவர் ‘தீக்ஷாரம்பம்’ எனும் சேர்க் கைத் திட்டம் உதவுகிறது.

சமூகமயமாக்கல், இணைந்து செயலாற்றல், கட்டுப்படுத்தும் ஆற்றலோடு செயல்படல், அனுபவப்படுதல் ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் நடைபெறும் அறிவுத் தொடக்கமானது பல் வேறு அம்சங்ளைக் கொண்டு நடை பெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு, நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் வேந்தர் டாக்டர் தி.ச.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி பேசினார்.

துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர், சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நிறுவனப் பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா வாழ்த்திப் பேசினார்.
புதிய மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img