திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட் டளை சார்பில் திருப்பூர் பகுதி பள்ளிகளில் முதல் மதிப்பெண்களைப் பெற்ற மாணாக்கர்களுக்கு 28-ம் ஆண்டு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெறுகிறது.
திருப்பூர் பகுதி பள்ளிகளில் பன்னிரண் டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை திருப்பூர் விளை யாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நடத்தி வருகிறது. மேலும், ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு கையுந்து பந்து போட்டியையும் நடத்தி வருகிறது.
அந்த வகை யில் 2022-23-ஆம் கல்வி ஆண்டிற்கான பன்னி ரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாண விகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சிறுபூலுவபட்டி, அமர்ஜோதி கார்டனில் உள்ள டிசெட் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட் டளையின் (டிசெட்) செயலாளர் துரைசாமி வரவேற்புரையாற்றினார். டிசெட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை வகித்தார்.
ஊக்கத்தொகை
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியம் மற்றும் வெற்றி – வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்தின் தலைவர் கிளாசிக் போலோ சிவ ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திருப்பூர் பகுதி பள்ளியளவில் முதலிடம் பெற்ற சுமார் 34 மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையினை வழங்குகினர். டிசெட் பொருளாளர் தேவராஜன் நன்றியுரை கூறினார்.
விழாவில் முதலிடம் பிடித்த பிரதிக்ஷா ரூ.5,000, இரண்டாமிடம் யாஷிகா குமாரிக்கு ரூ.4,000, சத்யா ரூ.4,000 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மற்ற மாணவர்கள் 31 பேருக்கு தலா ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. மொத்தம் 34 பள்ளிகளைச் சேர்ந்த 34 மாணாக்கர்களுக்கு ரூ.1,06,000 ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.