கோவையில் வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை அக்ரி இன்டெக்ஸ் &2023 கண்காட்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து விவசாய பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வி.கீதாலட்சுமி, அக்ரி இன்டெக்ஸ் 2023 தலைவர் தினேஷ்குமார், கொடீசியா தலைவர் திருஞானம் ஆகியோர் கூறியதாவது:-
கோவை கொடீசியாவில் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம். அமைச் சர் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள் விழாவில் மேயர் கல்பனா, கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த கண்காட்சியில் 500க்கும் மேற்பட அரங்குகள் இடம்பெறுகிறது. கொரியா இஸ்ரேல் ஜப்பான் ஜெர்மனி இத்தாலி அமெரிக்கா உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து மாநில அரங்குகள் இடம்பெறுகிறது.
இந்த கண்காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பார் வையிடலாம் மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.