திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 ஊராட்சிகளில் உள்ள 125 ஊரக குடியிருப்புகளில் வசித்து வரும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் 2021 ஆம் ஆ அன்னூர் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் துவக்கப்பட்டது.
3 வருடங்களாக நடைபெற்றும் பணிகள் முடிவடையாதலால் நேற்று மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் மாவட்ட கவுன்சிலர்கள் வேல்குமார் எம் சாமிநாதன், கண்ணம்மாள் ராமசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ் எம் பழனிச்சாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்யம் மகராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பட்டமபாளையம் சரவணன், சொக்கனூர் சகுந்தலா சென்னியப்பன், தொரவலூர் தேவகி சம்பத்குமார், வள்ளிபுரம் முருகேசன், ஈட்டிவீரம்பாளையம் ராதாமணி சிவசாமி, பெருமாநல்லூர் சாந்தாமணி வேலுச்சாமி, பொங்குபாளையம் சுலோச்சனா வடிவேல், காளிபாளையம் சுகன்யா வடிவேல், பெருமாநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் பொன்னுலிங்கம், கணக்கம்பாளையம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் மேக்னம் எம் பழனிச்சாமி, ஆகியோருடன் சென்று மனு அளித்தார்.
மேலும் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சியில் உள்ள அப்பியாபாளையத்தில் பகுதியில்
இயங்கி வரும் பகுதி நேர நியாய விலை கடையினை முழு நேர கடையாக மாற்றித் தர வேண்டும் என்றும் பட்டம்பாளையம் ஊராட்சியில் 45 வருடங்களாக பட்டா இல்லாமல் வசித்து வரும் 13 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார்.