வேலம்மாள் போதி வளாகம் பள்ளியில் 2023-24 மாணவர் பேரவையின் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது தலைவர் எம்.பி.முத்துராமலிங்கம் இயக்குனர் சசிகுமார், கல்வி இயக்குனர் கீதாஞ்சலி சசிகுமார் ஆகியோரின் தலைமையில் பெருந்துறை துணைசரக துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயபாலன் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் முதல்வர் ரா.ஆனந்தி வரவேற்றுப் பேசினார். துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயபாலன் பேசுகையில் மாணவர்கள் பெற்றோரின் வார்த்தைகளைப் பின்பற்றி நடக்குமாறு அறிவுறுத்தினார். பள்ளியின் மாணவர் தலைவி விதார்தினி மதன் நன்றி கூறினார்.