fbpx
Homeபிற செய்திகள்நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது- கோவையில் கொண்டாட்டம்

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது- கோவையில் கொண்டாட்டம்

இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், அர்ஜுன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. நீண்ட நாள் காத்திருப்பதற்குப் பிறகு இன்றைய தினம் திரைப்படம் வெளியானது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சியானது திரையிடப்பட்ட நிலையில் கோவையில் பல்வேறு திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

துடியலூர் பகுதியில் உள்ள முருகன் திரையரங்கில் நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க நடனக் குதிரையை ஆட வைத்தும் பேப்பர் ஸ்பிரே அடித்தும் அஜித் அஜித் என முழக்கமிட்டு மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img