fbpx
Homeபிற செய்திகள்மத்திய மக்கள் தொடர்பக அலுவலகம் சார்பில் பொள்ளாச்சியில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பு விழிப்புணர்வு...

மத்திய மக்கள் தொடர்பக அலுவலகம் சார்பில் பொள்ளாச்சியில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி நகரத்தார் மண்டபத்தில் மத்திய மக்கள் தொடர்பகம் கோவை அலுவலகத்தின் சார்பில் பொள்ளாச்சியில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை பொள்ளாச்சி சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசு கையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மகளிர் சுய உதவி குழுவினர் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும், குறிப்பாக அஞ்சல் துறையின் திட் டங்கள் மிகவும் பயனுடையவை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், மாநில அரசின் மதி இணையதள செயலி மூலம் தொழில் முனை வோர் பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொள்ளாச்சி சுற்றுப்புற மகளிர் சுயதொழில் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்களை சார் ஆட்சியர் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் அஞ்சல் துறை திட்டங்கள் குறித்து அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினி பேகம் பேசினார், பிரதம மந்திரியின் மக்கள் வங்கி திட்டம் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் விளக்கினார்.

இந்திய தர நிர்ணய அமைவினத்தின் முக்கியத்துவம் குறித்து விஞ்ஞானி ரினோ ஜான் எடுத்துரைத்தார், ஒருங்கி¬ ணந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஜோதிமணி, கற்பகம் கல்லூரி ஆசிரியர் முனைவர் தர்மராஜ், மக்கள் மருந்தக ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து மத்திய மக்கள் தொடர்பக அலுவலர் சந்திரசேகர் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் முன்னதாக பொள்ளாச்சி ஹை கிளாஸ் தொண்டு நிறுவன இயக்குநர் பிலால் வரவேற்றுப் பேசினார். மேலாளர் மீனா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img