fbpx
Homeபிற செய்திகள்கோவை 100 அடி ரோடு ஜோய்ஆலுக்காஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் மறுதிறப்பு விழா ‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி...

கோவை 100 அடி ரோடு ஜோய்ஆலுக்காஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் மறுதிறப்பு விழா ‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’ துவக்கம்

உலகின் முன்னணி நகை நிறுவனமான ‘ஜோய்ஆலுக்காஸ்’, கோவை 100 அடி சாலையில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை திறந்து வைத்தது. அத்துடன் ‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’ என்ற பிரத்யேக வைரம் மற்றும் ரத்தினக் கல் நகைகளின் கண்காட்சியையும் தொடங்கியுள்ளது.
திரைப்பட நடிகை மாளவிகா சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய ஷோரூமையும், வைர நகை கண்காட்சியையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பி.பி.எஸ். குழுமத் தலைவர் பி.பி. செல்வன், ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் கே.ஏ.குரியச்சன், ஜோய்ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஹென்றி ஜார்ஜ், பொது மேலாளர் பி.டி.ஜோஸ், சில்லறை விற்பனைப் பிரிவுத் தலைவர் ராஜேஷ் கிருஷ்ணன், சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் அனிஷ் வர்கீஸ், பிராந்திய மேலாளர் சுமேஷ் கே.ஏ. உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும், ஏராளமான வாடிக்கையாளர்களும் கலந்துகொண்டனர்.
வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச அளவிலான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், இந்த 100 அடி சாலை ஷோரூம் மூன்று தளங்களில் நவீன அலங்காரங்கள், விசாலமான இடவசதி மற்றும் போதிய வாகன நிறுத்துமிட வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மணப்பெண் ஆபரணங்கள் முதல் தினசரி பயன்பாட்டு நகைகள் வரை அனைத்துத் தலைமுறையினரையும் கவரும் பாரம்பரிய மற்றும் நவீன டிசைன்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
மறுதிறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட் டுள்ளன.
பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகள் வாங்கும் வாடிக்கையாளர் களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.150 கூடுத லாக வழங்கப்படும்.
மறுதிறப்பு விழாவின் முதல் மூன்று நாட்களில் பொருட்கள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உறுதியான பரிசு வழங்கப்படும்.
ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் வைர நகைகள் வாங்குபவர்களுக்கு ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும்.
இது குறித்து ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், “கோவையில் எங்களின் 100 அடி சாலை ஷோரூமை புதிய பொலிவுடன் மீண்டும் திறப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இந்த மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், கட் மற்றும் அன்கட் வைரங்களில் புதுமையான டிசைன் களைக் கொண்ட ‘பிரிலியன்ஸ் டயமண்ட் ஜூவல்லரி ஷோ’வை ஏற்பாடு செய்துள்ளோம். வாடிக்கை யாளர்களுக்கு மறக்க முடியாத, பிரீமியம் நகை ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதே எங்களின் முதன்மை நோக்கம்,” என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img