fbpx
Homeபிற செய்திகள்வாசுதேவநல்லூர் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை யூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்

வாசுதேவநல்லூர் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை யூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தென்மலை ஊராட்சி சுப்ரமணியாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ 5.14 லட்சம் மதிப்புள்ள சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன், ஒன்றிய கழக செயலாளர் பொன் முத்தையாப் பாண்டியன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசுபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளைச் செயலாளர் குருசாமி, அரசு ஒப்பந்ததாரர்கள் மணிகண்டன், வெள்ளத்துரை, கிராம நிர்வாகிகள் கருப்பையா, வெள்ளத்துரை, தேவபிச்சை, தெய்வக்கனி, சீனிராஜ், உள்ளார் விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img