fbpx
Homeபிற செய்திகள்மிருக வதைத் தடுப்பு சங்க அலுவலகத்தை திறந்துவைத்த ஆட்சியர் பவன்குமார்

மிருக வதைத் தடுப்பு சங்க அலுவலகத்தை திறந்துவைத்த ஆட்சியர் பவன்குமார்

கோவை மிருக வதைத் தடுப்பு சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட புதிய அலுவலகத்தை மாவட்ட ஆட்சியரும் சங்கத்தின் தலைவருமான பவன் குமார் க.கிரியப்பனவர் திறந்து வைத்தார். அத்து டன் RID 3206 ரோட்டரி கிளப்புகள் சார்பில் விலங்குகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி இயக்கமும் தொடங்கப்பட்டது. சமூக விலங்குகளின் ஆரோக் கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த இயக்கத்தின் நோக்கம்.
“இந்த சங்கம் இரக்கம், சேவை மற்றும் விலங்கு நலனுக்கான எங்கள் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என கோவை மிருக வதைத் தடுப்பு சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் அபர்ணா ஸுங்கு தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img