கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்களை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திங்கள்கிழமை வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் ரமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உள்ளிட்டோர் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக 465 மனுக்களை அளித்தனர். அவற்றைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
நிகழ்வில், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.2,200 வீதம் மொத்தம் ரூ.13,200 மதிப்பில் நடை உபகரணங்களை வழங்கினார்.