கோவை சௌரிபாளையத்தில் உள்ள புனித பிலோமினாள் உயர்நிலைப்பள்ளியின், 61 வது பள்ளி ஆண்டு விழா, தலைமை ஆசிரியை அருட்சகோதரி, செல்வி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, பள்ளியின் சார்பில் மாநில மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவில், சிறப்பு விருத்தினராக புனித பிரான்சீஸ் சவேரியார் ஆலயம் பங்கு தந்தை ஜார்ஜ் ரொசாரியோ, அரிமா டாக்டர் சண்முகசுந்தரம், லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் சமையன், கிருஷ்ணன், புனித பிலோமினாள் உயர்நிலைப்பள்ளி தாளாளர் அருட் சகோதரி அல்போன்ஸ் நம்பிக்கை மேரி, தலைமை அருட் சகோதரி தெரசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



