பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 77 ஆவது குடியரசு தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சேத்தியா தோப்பு காவல் ஆய்வாளர் கவிதா, அனைத்து மகளிர் காவல் நிலையம் எம்.பேபி, (உதவி) ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
விழாவில் வளமான பாரதத்தை உருவாக்க மாணவர்களின் கடமைகள் என்ன வென்று எடுத்துரைக்கப்பட்டது.



