கோவை ஆலந்துறை -காருண்யா நகர் பக்கம் உள்ள மத்வராயபுரம், போதக சேகரத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது.
இங்கு ஆலயத்தின் 12 வது பிரதிஷ்டை பண்டிகையும், அசன விருந்து ஆராதனையும் நேற்று மாலை நடந்தது.
கோவை சிஎஸ்ஐ பேராயர் பிரின்ஸ் கால்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் 5 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஆயர் தலைவர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், செயலாளர் டாக்டர் பிரின்ஸ் அருள்ராஜ், பொருளாளர் சி.ஆனந்த் ஆசீர், திருமண்டல குழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஞானபிரகாசம், ஆபிரகாம் மற்றும் போதக சேகர குழு திருமண்டல குழு உறுப்பினர்கள், திருச்சபை மக்கள் செய்திருந்தனர்.

கோவையில் உள்ள முதியோர் இல்லத்திற்கும், மன வளர்ச்சி குன்றிய சிறுவர்கள் இல்லத்திற்கும் ஆலய அசன விருந்து அனுப்பி வைக்கப்பட் டது.



