Homeபிற செய்திகள்கோவை நாடார் சங்கம் சார்பில் ரூ.25 கோடியில் காமராஜர் அரங்கம்

கோவை நாடார் சங்கம் சார்பில் ரூ.25 கோடியில் காமராஜர் அரங்கம்

கோவை நாடார் சங்கம் சார்பாக செல்வபுரத்தில் உள்ள இடத்தில் ரூ.25 கோடி செலவில் காமராஜர் அர ங்கம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை செல்வபுரத்தில் நடந்தது. கோவை நாடார் சங்க தலைவர் ஆர்.பாஸ்கரன் நாடார் தலைமை தாங்க அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அனுக்கிரஹா வால்வு ஹாஸ்டிங் இணை இயக்குநர் ஆனந்தகுமார், கவிதா ஆனந்தகுமார், இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன், ரத்தினமாலா, முன்னாள் மத்திய மண்டல தலைவர் ஆதிநாராயணன், பிரின்ஸ் சுந்தர், ஆசீர்வாத நாடார் சன்ஸ் ஜே.பரமானந்தம், துரைசிங் சூப்பர் மார்க்கெட் கே.டி.சோமசுந்தரம், எஸ்.குமார், ஜெயராஜ், ரகுபதி, கருணாகரன், ராஜ் நாடார், நாடார் சங்க பொதுச்செயலாளர் வக்கீல் விமலராகவன், பொருளாளர் ராஜமாணிக்கம், துணை தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜமாணிக்கம், வாசகன், செயலாளர்கள் சிலுவை முத்துக்குமார், விஜயகுமார், சபாபதி, இளைஞர் அணி பொறுப்பாளர் விக்னேஷ் புகழ்வேந்தன், செயற்குழு உறுப்பினர்கள் சுடலைமணி, செந்தில் ஆறுமுகம், ஸ்டீல் ராஜன், தாமஸ் துரை, ஜெயதிலகா, டி.சி.விஜயகுமார், விஜய காண்டீபன், இளையராஜா மற்றும் அனைத்து நாடார் அமைப்பினர், தொழில் அதிபர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img