fbpx
Homeபிற செய்திகள்விலை நிர்ணயம் செய்ய மா விவசாயிகள் கோரிக்கை

விலை நிர்ணயம் செய்ய மா விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவிற்கு விலை நிர்ணயம் செய்திட முத்தரப்பு கூட்டம் ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது. இக்கூட் டத்தில் மாவிவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத் தினர், வேளாண் வணிகம், வேளாண் மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மா விவசாயிகள் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் மாசாகுபடி செய்கின்றனர். குறிப்பாக 80 சதவீதம் மானாவாரி மாமரங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். நிகழாண்டிலும் கடும் வறட்சி, போதிய மழையின்றி 90 சதவீதம் மா விளைச்சல் பாதிக்கப்பட்டது. மா விளைச்சலை விட மாமரங்களை காக்கவே, விவசாயிகள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மாசீசன் தொடங்கு வதற்கு முன்பே முத்தரப்பு கூட்டம் நடத்தி விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என எங்களது கோரிக்கையை யாரும் செவிக் கொடுத்து கூட கேட்பதில்லை.
நிகழாண்டிலும் மா கிலோ ஒன்றுக்கு ரூ.50 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நிலையில், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கிலோவிற்கு ரூ.18 தான் வழங்கினர்.

தற்போது அறு வடை முடிந்தநிலையில், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கிலோவிற்கு ரூ.28 வழங்குவதாக தெரிவிக்கின்றனர். இந்த விலை நிர்ணயம், தமிழக விவசாயிகளுக்கா அல்லது ஆந்திரா மாநில மா விவசாயிகளுக்கா என தெரியவில்லை. மா விவசாயிகளின் உணர் வுகளை அலுவலர்கள் புரிந்துக் கொள்வதில்லை. காலம் தாழ்த்தி நடத்தப்படும் இந்த கூட்டத்தால் எவ்வித பயனும் இல்லை.

மேலும், கடும் வறட்சியால் ஆயிரக்கணக்கான மாமரங்கள் காய்ந் துள்ளன. சில விவசாயிகள் டிராக்டர் மூலம் அதிகளவில் தண்ணீர் விலைக்கு வாங்கி மாமரங்களை காப்பாற்றி உள்ளனர். எனவே, எவ் வித பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒன்று ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த இழப்பீட்டை இயற்கை உரங்களாக அளிக்கமால், ரொக்கமாக வழங்க வேண்டும். அண்டைய மாநிலங்களில் மா விவசா யிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது போல், தமிழகத்திலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல் மாந்தோட்டங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானிய விலை யில் நவீன கருவிகள் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இனி யாவது மாசீசன் தொடங்கிய வுடன் முத்தரப்பு கூட்டம் நடத்தினால் தான் பயனுள்ளதாக இருக்கும்.

இதே போல், மாவிவசாயிகளின் பெயரில் நடத்தப்படும் மாங்கனி கண்காட்சியால் எவ்வித பயனும் இல்லை. நகரில் வசிக்கும் மக்களின் பொழுதுபோக்கிற்காக மட்டுமே நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சியில் மா விவசாயிகளுக்கான கருத்தரங்கு உள்ளிட்டவை நடத்தப்படுவதில்லை, என்றனர்.

மாவட்ட ஆட்சியர் பேசுகையில் வறட்சி தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

படிக்க வேண்டும்

spot_img