பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், பர்ப்பிள்ஸ் டே என்ற முன்னாள் மாணவர் அமைப்பின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப்.4) நடந்தது.
முன்னாள் மாணவர் அமைப்பு ஆண்டு தோறும் மெய்நிகர் அளவில் மாபெரும் சந்திப்புகளை ஏற்படுத்தி நடத்தி வருகிறது.
கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் சுகந்தா சம்பத்குமார், நல்ல மாற்றத்தை நம்மில் இருந்து பெறப்பட வேண்டும் என்ற முதுமொழியின் வழியாக முன்னாள் மாணவர்கள் வழங்கிய தொகையினை சிறந்த மற்றும் தகுதியான மாணவர்களின் ஊக்க உதவிக்கு வழங்கி வருகிறார்.
அமைப்பின் சார்பில் 5.1 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை நிர்வாக உறுப்பினரான சுகந்தா சம்பத்குமார், கல்லூரி முதல்வர் ப.மீனாவிடம் வழங்கினார்.
கல்லூரியின் செயலர் டாக்டர் நா.யசோதா வரவேற்றார்.
கல்லூரி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி சிறப்புரையாற் றினார்.
கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தனது வைர விழாவைக் கொண்டாடும் வேளையில், முன் னாள் மாணவர்கள் அமைப்பு, கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர் என சமூகத்தின் நல்வாழ்வில் தங்கள் பங்களிப்பை வழங்கிய 60 மாணவர்களை அங்கீகரித்து, நிர்வாக உறுப்பினர் சுகந்தா சம்பத்குமார் விருதுகள் வழங்கினார்.பட்டிமன்றப் பேச்சாள ரும், மேனாள் மாணவருமான கவிதாயினி மீ.உமாமகேஷ்வரி சிறப்பு ரையாற்றினார்.
கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுபாஷினி, முன்னாள் மாணவியும், நடனக் கலைஞரும், நடன அமைப்பாளருமான லாவண்யா சங்கரின் நடன நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் ப.மீனா நன்றி கூறினார்.
இக்கல்லூரி உருவாக்கிய 2500 மாணவர்கள் சங்கமிக்கும் களமாகவும் இந்நிகழ்வு நடந்தது.