fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வைரம் - தங்க நகைகள் தயாரிப்பு பயிற்சி மையம் நாளை தொடக்கம்

கோவையில் வைரம் – தங்க நகைகள் தயாரிப்பு பயிற்சி மையம் நாளை தொடக்கம்

கோவையில் டைமன்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் தென் இந்தியாவில் முதல்முதலாக வைரம் மற்றும் தங்க நகைகள் தயாரிப்பு பயிற்சி மையம் வருகிற 5-ம்தேதி (நாளை) தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து வைரம் மற்றும் தங்க நகை தயாரிப்பு ஆசிரியர் முரளிதரன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் அகிலாண்டேஸ்வரி, சேஷ கோபால் ஆகியோர் கூறியதாவது:- டைமண்ட்ஸ் இந்தியா சார்பில் ஆண்டுதோறும் 100 மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் முன்னேற்றத்திற்காக கட்டணம் இல்லா 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி காலம் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை நடக்கும்.

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் ஒயிட் பில்டிங் கட்டிடத்தில் இதற்கான பயிற்சி மையம் தொடக்கவிழா வருகிற 5-ந்தேதி (நாளை) நடக்கிறது. விழாவில் சென்னை டைமன் மற்றும் நகைகள் வியாபாரிகளின் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கலந்துகொண்டு வைரம் மற்றும் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையத்தை துவக்கி வைக்கிறார். இந்த பயிற்சி மையம் சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் அமைக்கபட்டுள்ளது.

இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிக அளவில் காத்திருக்கிறது.
மேற்கண்டவாறு அவர் கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img