fbpx
Homeபிற செய்திகள்கோவை எலைட் அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு

கோவை எலைட் அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு

கோவை எலைட் அரிமா சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கான பதவி ஏற்பு விழா கோவை கேரளா கிளப் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அதில் புதிய தலைவராக சதீஷ்குமார், செயலாளராக சசி நாராயணன், பொருளாளராக ஆடிட்டர் கிரிதரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இந்த புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் ரவிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா தனது பொறுப்புகளை புதிய தலைவர் சதீஷ்குமார் இடம் ஒப்படைத்தார்.

விழாவில் டாக்டர் சண்முகசுந்தரம், பாலகிருஷ்ண, வின்சென்ட், தேவராஜ், ஆனந்த், சுரேந்தர், பிள்ளை மணி, பீஷ்ம ராஜன், சாமி, சம்பந்தம், ஆலால சுந்தரம், மகாலிங்கம், நடராஜ், கேப்டன், கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img