கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் அனைத்திந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்போடு இணைந்து 11,12 ஆகிய தேதிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட துணை வேந்தர்களின் வட்டமேசை மாநாட்டினை நடத்தியது.
இந்த மாநாடு விக்சித் பாரத் மற்றும் அதற்கு மேலான மாற்றம் வழங்கும் உந்துசக்தி என்ற மையப்பொருளை அடிப்படையாக வைத்து நடந்தது. இந்த மாநாட்டில் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர். வை.பாரதி ஹரிசங்கர் வரவேற்புரை வழங்கினார்.
இந்த மாநாட்டினை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் தி.ச.க.மீனாட்சி சுந்தரம் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அனைத் திந்திய பல்கலைக்கழகங்கள் கூட் டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர்.பங்கஜ்மிட்டல், தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர்.என்.எஸ்.கால்ஸி ஆகியோர் மாநாட்டின் தொடக்க விழா உரை நிகழ்த்தினர்.
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீரூபமித்ர சௌத்ரி மாநாட்டின் குறிப்புரையை வழங்கினார்.
தொடக்க விழாவிற்கான நன்றியுரையினை அவினாசி லிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர்.ஹை.இந்து வழங்கினார்.
இந்நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் இரண்டு நாள் கலந்துரையாடல்களில், கல்வித் தலைமை, பாடத்திட்ட புதுமை, மதிப்பீடு, நிர்வாக சீர்திருத்தங்கள், நிலையான நடைமுறைகள் மற்றும் கல்வியில் செயற்கை நுண்ணறிவு குறித்த அமர்வுகள் இடம் பெறுகின்றன.



