fbpx
Homeபிற செய்திகள்சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆய்வு

சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆய்வு

கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பஞ்சாலைக் கழக தானியங்கி விசை தறி கூடத்தில்  கைத்தறித்துறை அமைச்சர் காந்தி  ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின்னர் அமைச்சர் காந்தி செய்தியாளர் சந்தித்து பேசினார். 

அப்போது, பள்ளிகளுக்கு 9 லட்சம் மீட்டர் யுனிபார்ம்  உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. ஏர்ஜெட் மிஷன் என்னென்ன தேவை இருக்கிறது என ஆய்வு செய்துள்ளோம்.இரு வருடங்களில்  இந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க பட்டுவருகின்றது. தற்போது பழைய பவர்லூம் மிஷன்களை எடுத்து விட்டு ஏர்ஜெட் மிஷன்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இப்போது 12 ஏர்ஜெட் மிஷன்  இருக்கின்றது.12 ஏர்ஜெட் மிஷன் கூடுதலாக அமைக்கபட இருக்கின்றது.ஏர்ஜெட் மிஷன் அமைத்து சோலார் அமைக்கப்பட இருக்கின்றோம். இதன் மூலம் வருங்காலத்தில் இந்த துறை  மிகவும் லாபம் இருக்கும் துறையாக மாறும் தமிழகத்தில் உள்ள 18 ஸ்பின்னிங் மில்களில்  6 மில்கள்  தான் இயங்குகின்றது. நம்மிடம் இயங்காமல்  இருக்கும் 12 மில்லிற்கு மட்டும்  486 ஏக்கர் நிலம் இருக்கிறது.
மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது.34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கின்றது.

5 தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடி இருக்கிறது. அதை நாம் எடுக்க முடியாது.மொத்தமாக 125 லட்சம்  பேல் பஞ்சு தமிழகத்திற்கு தேவை. 15 லட்சம் பேல்கள் இங்கு உற்பத்தியாகின்றதுகாட்டன் கார்ப்பரேசன் பஞ்சு எல்லாம் வடமாநிலங்களில் உள்ள  குடோனில் இருந்து வருகின்றது. 
மேலும்  காட்டன் விலையை நாம்  நிர்ணயம் செய்ய முடியாது.காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மாதிரி காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என ஆரமிக்கும் திட்டம்  இருக்கிறது.போதிய  நிதி இல்லாத்தால் துவங்குவதில் காலதாமதம் இருக்கிறது.அது அமைந்து விட்டால் பருத்தியை நாம் வாங்கி இருப்பு வைத்து  பருத்தி விலையை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img