தளபதி விஜய் பிறந்த நாளை நற்பணி நாளாக கொண்டாடும் விதமாக கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி சார்பாக கோவையின் பல்வேறு பகுதிகளில்,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணி சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவுறுத்தலின் படி, தளபதி விஜய் பிறந்தநாள் விழா காலையில், கோணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.. தொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் கிறிஸ்தவ ஆலயத்திலும்,திருச்சி சாலையில் உள்ள ஜங்கிலி பீ தர்காவிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர்.
இதனைதொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், என தளபதி விஜய்யின் பிறந்த நாளை கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவரணியினர் உற்சாகமாக கொண்டாடினர்.இதில் சிங்கை நகர சுரேஷ்,மற்றும் சதீஷ் சார்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தெலுங்குபாளையம் அஜீத்,சபரி, செல்வபுரம் சுரேந்திரன்,வசந்த் சார்பாக பத்தாயிரம் ரூபாய் மருத்துவ உதவி,கருமத்தம்பட்டி மகளிர் அணி மோகனபிரியா தலைமையில்,அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், சூலூர் ஒன்றிய நிர்வாகிகள் சத்திய சுந்தரம்,கணேஷ் ஆகியோர் சார்பாக புதிய பெயர் பலகை திறப்பு, கொடியேற்றுதல்,மதிய உணவு வழங்குதல்,கணியூர் பகுதி பாலு மற்றும் பாலா சார்பாக மதிய உணவு,ரோட்டோரத்தில் இருக்கும் யாசகம் கேட்பவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட மாணவரணி சார்பாக ஆயிரம் மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.