கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கரூர் காதப்பாறை குப்புச்சி பாளையம் கிராமத்தில் ஏழு நாள் நடந்தது.
துவக்க விழாவில் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன் ஆகி யோர் தலைமை தாங்கினர்.
பரணி பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன் முகாமை துவக்கி வைத்து பேசும் போது, தூய்மை இந்தியா பற்றியும் அதன் தற்போதைய முக்கியத்துவம் குறித்தும்,நாட்டிற்காக தங்களை அர்பணித்துள்ள ராணுவ வீரர்களையும் நினைவு கூர்ந்து, மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் இத்தகைய நாட்டு நலப்பணித் திட்டத்தில் தங்களை ஈடுப டுத்திக் கொள்வதன் மூலம் வருங் காலத்தில் சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அவர்களின் பொது வாழ்க்கைக்குத் தேவையா னவற்றையும் கற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
தமிழக கேரம் சங்க மாநில பொதுச்செயலாளர் ‘அர்ஜூனா விருதாளர்’ இருமுறை முன்னாள் உலக சாம்பியன் மரிய இருதயம், மாணவர்களை வாழ்த்தினார்.
முதல்வர் கே.சேகர் வர« வற்றார். நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர் ஆர்.சரவணன் நன்றி கூறினார்.
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு பேரணி, ஆரோக்கிய வாழ்விற்கு சிறந்த உணவு முறைகள், டெங்கு விழிப்புணர்வு, யோகா மற்றும் புத்தகம் வாசித்தலின் முக்கியத் துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரம் நடுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்.சுமதி, மாவட்ட மைய நூலக அலுவலர் எஸ்.எஸ்.சிவக்குமார், பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் பி.சாந்தி ஆகி யோர் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
ஏற்பாடுகளை சி.ராமசுப்பிரமணியன் தலைமையில், பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அகடமிக் முதல்வர் எஸ்.பி.ரகுநாதன், மேல்நிலை ஒருங் கிணைப்பாளர் வி பானுப்பிரியா, பரணி வித்யாலயா துணை முதல்வர் ஆர்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.



