அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் மற்றும் ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களை இணைந்து நேற்று (அக்.13) திருச் சிற்றம்பலம் அரங்கில் கலைவிழாவை கொண்டாடியது.
மனையியல் புல முதன்மையர் முனைவர் அம்சமணி வரவேற்றார்.
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவ னத்தின் வேந்தர் முனைவர் தி.ச. க.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி பேசும்போது, பல்கலைக்கழகம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை 65 வருடங்களுக்கும் மேலாக கலைவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மாணவியர்கள் படிப்பில் மட்டுமல்லாது கலையிலும் திறமைமிக்கவர்கள் என்பதை நடைபெறும் போட்டிகள் வழி வெளிப்படுத்தியுள்ளமைக்கு பாராட் டுகள். சுயமுன்னேற்றம், ஊக்கம், தைரியம் அனைத்தும் வளர்வதற்காக ஒவ்வொரு வருடமும் இக்கலைவிழா நடைபெறுகிறது என்றார்.
மேனாள் வேந்தர் முனைவர் க.குழந்தைவேல் அண்ணா பேசுகை யில், ஒவ்வொரு மாணவியும் ஏதாவது ஒரு கலையைக் கற்க வேண்டும். கலைகள் மூலம் திறமைகளை வளர்த் துக் கொண்டால்தான் தானும் இன் புற்று பிறருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும் என்றார்.
துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் பேசும்போது, இந்தியா மரபுசார் கலாச்சாரப் பண்புகளுடன் வளர்ந்து வருகின்றது. இந்தியப் பண்பாட்டு மரபுதான் 66 வருடங்களாக நடைபெற்று வரும் நமது கலைவிழா மந்திரமாக திகழ் கிறது என்றார்.
பதிவாளர் முனைவர் சு.கௌசல் யா, மாணவிகளின் தசாவதார மன் றங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று பாராட்டினார்.
ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் முனைவர் மீ.ராஜேஷ், துணை அறங்காவலர் முனைவர் கௌரி ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கலைவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகள் 170 பேருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அறிவியல் மற்றும் கலைத்துறை பேராசிரியர் முனைவர் ஆயிஷா பேகம் நன்றி கூறினார்.