கோவையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் படத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பு மாநில துணைச்செயலாளர் கோவை செல்வராஜ் அவர்களின் திருவுருவ படத்தை, தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
இதில் கோவை செல்வராஜ் மனைவி கலாமணி, மகன்கள் விக்னேஷ், முருகானந்தம், வெங்கட்ராம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இந்த நிகழ்வில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த் திக் (முன்னாள் எம்எல்ஏ), தொஅ.ரவி, தளபதி முருகேசன், மாநகர மேயர் ரங்கநாயகி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயந்தி, கல்பனா செந்தில், வடக்கு மாவட்ட பொருளாளர் ரகுமான் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் ராஜேந்திரன், சோமு என்ற சந்தோஷ், பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ், நிர்வாகிகள் போனஸ் பாபு, சரத், சந்திரசேகர், காங்கிரஸ் சார்பில் ஹரிஹரசுதன், கருணாகரன், தமிழ்மறை, மேற்கு மண்டல தலைவர் தெய்வாணை தமிழ்மறை, மாநில மாணவரணி துணைச்செயலாளர் விஜி. கோகுல், ஜின்னா, பழக்கடை முத்துமுருகன், சிவராமன், சிடிடி பாபு, செந்தில் கார்த்திகேயன், உசேன், செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.