fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனத்தில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாட்டம்

அவினாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனத்தில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாட்டம்

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத் திருச்சிற்றம்பலக் கலையரங்கில், தேசிய அறிவியல் தின விழா, ‘உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்’ எனும் பொருண்மையில் நடந்தது.
ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மைய இயக்குநர் முனைவர் பி.லலிதா வரவேற்றார்.
பல்கலை துணைவேந்தர் முனைவர் வி.பாரதி ஹரிசங்கர் வாழ்த்துரை வழங்கினார்.

வேந்தர் பேராசிரியர் எஸ்.பி.தியாக ராஜன் தலைமை தாங்கி பேசும் போது, இந்நாள் அறிவியலுக்கு ஊக்கமளிக்கும் நாள். அறிவியல் என்பது ஒரு தொடர்ச்சியான கற்றல் செயல்முறை. மாணவிகளின் புது மையான கண்காட்சிகளின் மூலம் மாணவிகளின் திறன்களையும் ஆர்வ மிகுதியையும் காட்டி உள்ளனர்.

பல் கலைக்கழகமும் தனது பங்களிப்பை அளித்துள்ளது பாராட்டுக்குரியது. மொழிபெயர்ப்பு தொடர்பான ஆராய்ச்சியை பல்கலைக்கழகம் ஊக்கு விக்க வேண்டும் என்றார்.

‘புதுமைகள்’

மும்பை, ஆதித்யா பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் ஹேமந்த்குமார் ஐயர், தொழில்நுட்ப விலங்கியல் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தும், தாவரவியல் துறையின் ஆண்டுதோறும் வெளி யிடக்கூடிய செய்திமடலை வெளியிட்டும், ‘புதுமைகள்’ என்னும் பொருண்மையில் பேசும்போது, நிலையான மற்றும் சீர்குலைக்கும் கண்டுபிடிப்புகள் பற்றியும், மாசுபாடு, காலநிலை மாற்றம், கார்பன்-டை-ஆக்ஸைடு மாற்றம், கிராபீன் என்பது பற்றியும், ஆற்றல் சேமிப்பு, நீர் சிகிச்சை குறித்தும் எடுத்துரைத்தார்.

ஸ்வீடன், கரோலின்ஸ்கா பல்க லைக்கழக மருத்துவமனையில் மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் சி.பி.சஞ்சீவி அறிவியல் தின உரையில், நோபல் பரிசுகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

ஆல்ஃபிரட் நோபலைப் பற்றியும், நோபல் பரிசானது உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. நோபல் அறக்கட்டளை மனித இனத்திற்கு மிகப்பெரிய நன்மைக்காக அமைந்துள்ளது. அப்பரிசினை மாணவிகள் பெறுவதற்கு ஊக்கமளித்தும் பேசினார்.

‘உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்’ என்னும் பொருண்மையில் அறிவியல் கண்காட்சி, அறிவியல் தொடர்பான வினாடி வினா, நாட்டுப்புறக் கலை கள் மூலம் அறிவியல் அறிவை சமூகத்திற்குப்பரப்புதல், மைம், Diy Discovery போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
உயிர் அறிவியல் புல முதன்மையர் முனைவர் ஏ.விஜயலட்சுமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img