fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் நந்தனா பேலஸ் இரண்டாவது உணவகம் திறப்பு

சென்னையில் நந்தனா பேலஸ் இரண்டாவது உணவகம் திறப்பு

நந்தனா பேலஸ் – பெங்களூரின் மிக பெரிய ஆந்திர உணவகம் தனது இரண்டாவது கிளையை சென்னையில் இன்று தொடங்கியது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூர் நகரில் 15 உணவகங்களில் சுவை மிகுந்த ஆந்திர உணவு வகைகளை வழங்கி வரும் நந்தனா பேலஸ், கடந்த ஆண்டு 16வது கிளையாக சென்னையில் தனது முதல் உணவகத்தை OMR சாலையில் மினி பார்ட்டி ஹால் வசதியுடன் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், 17வதாக சென்னையில் தனது இரண்டாவது கிளையை வேளச்சேரி, 100 அடிசாலை, லட்சுமிநகரில் நேற்று தொடங்கியது.

நந்தனா பேலஸ் பாரம்பரிய ஆந்திர உணவு வகைகளை சுவையும் மணமும் மாறாது வழங்கி வருகிறது. ஆந்திரா, ஹைதராபாத் ,பல்வேறு உணவு வகைகள் மற்றும் பிரியாணி வகைகளை உலகதரம் வாய்ந்த அருந்தும் இடப்பகுதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் நந்தனா பேலஸ் தனிமுத்திரை பதித்துள்ளது.

நந்தன பேலஸில் தனக்கே உரிய சிறப்பு உணவு வகைகளான சிக்கன் அமராவதி டிரய், சிக்கன் குண்டூர்டிரய் மற்றும் ஃபிஷ் அப்போபலாஆகியவற்றை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது.

மேலும், அனைவருக்கும் சிக்கன் க்ஷத்ரிய, ஷோலேகெபாப், பேம்பூசிக்கன், கேரட் 65, காளான்நெய் 65, பேபிகார்ன் புதினாட்ரய் ஆகிய உணவுகளையும் வழங்குகிறது.
நந்தனா பேலஸ் குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் டாக்டர்ஆர்.ரவிச்சந்தர் கூறுகையில், “தரம், சிறந்த துரிதசேவை, நல்ல அனுபவங்களை அளிப்பதே நந்தனாவின் தனி முத்திரை.

சென்னை மற்றும் பெங்களூரில் நந்தனா பேலஸ் மொத்தம் 16 ரெஸ்டாரண்ட் கிளைகளையும், பெங்களூரில் 5 கிளவுடு கிட்சன்களையும் சேர்த்து 21 கிளைகளை கொண்டுள்ளது.

இந்த இனிமையான தருணத்தில் நந்தனா பேலஸ் தன் 17-வது ரெஸ்டாரண்ட் கிளையை சென்னை – வேளச்சேரி 100 அடிசாலை, லட்சுமி நகரில் தற்போது தொடங்கியுள்ளது, என்றார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக வந்து தங்கள் கிளையை திறந்து வைத்த அடையார் ஆனந்த்பவன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் கே.டி. வெங்கடேஷ்ராஜா, கே.டி. ஸ்ரீநிவாசராஜா, குத்துவிளக்குஏற்றிய சூரியபிரகாஷ், வரதராஜுலு, சிறப்பு விருந்தினர்களான லிட்டில் பிளவர் கல்விக் குழும நிறுவனங்களின் நிறுவனர் ராஜசேகரன், கௌரவ விருந்தினர்களான மருத்துவ சேவை இயக்குனர் மோகன்பாபு, நரசிம்மரெட்டி -மற்றும் பில்டர்ஸ் மற்றும் டெவலப்பர்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நந்தனா பேலஸ் குழுமத்தின் சார்பாக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img