மை ஃபைனான்ஸ் வெல்னஸ் – சிரி (SIRI) மைக்ரோகேர் சிறு குறு தொழில்முனைவோருக்கு, அவர்களின் வணிக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கடன் உதவியை அறிமுகப்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மது கிரண், நாட்டில் உள்ள சலுகை பெற்ற தொழில்முனைவோருக்கு பொறுப்பான கடன் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மை ஃபைனான்ஸ் வெல்னஸின் தலைமை நிர்வாக அதிகாரி மது கிரண் கூறுகையில், நிறுவனத்தின் இந்த சலுகையானது, வருமானம் ஈட்டும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கு, நிதி கல்வியறிவு, மைக்ரோ பைனான்ஸ் பிளாட்ஃபார்ம் ஆகியவற்றின் இறுதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை ஈட்ட உதவுகிறது.
கடன், இந்த கடனுதவி, பெண்கள், சிறு, நானோ மற்றும் அமைப்புசாரா தொழில் முனைவோர் அனைவருக்கும் வழங்கப்படுகிறது, இந்நிறுவனம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ பைனான்ஸ் பிளாட்ஃபார்மை வழங்குகிறது.
இது இந்த தொழில்முனைவோருக்கு அவர்களின் வணிக முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவுகிறது. பிளாட்ஃபார்ம் பயன்பாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு வணிகக் கடன்கள் வழங்கப்படும் என்றார்.
வாழ்வாதாரம் மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் பகுதிகளில் மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும், அவர்களை ஆத்மநிர்பராக்கவும் நிறுவனம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை நிறுவனத்தின் உத்திசார் கூட்டாண்மைத் தலைவர் கோவிந்த் தெரிவித்தார்.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு 2020-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் சிறு குறு, பெண் தொழில்முனைவோர் ஆகிய பகுதிகளில் நிதியியல் கல்வியறிவு, மைக்ரோ பைனான்ஸ் பிளாட்ஃபார்ம் ஆகியவற்றின் மூலம் நிதிச் சேவைகளை வழங்கி இப்போது மைக்ரோ பிசினஸுடன் தொடங்கியுள்ளது.