இருதயநோய் நிபுணர்கள் கலந்து கொள்ளும் தேசிய அளவிலான மாநாடு இன்று சென்னையில் தொடங்கியது. 1500 கும் மேற்பட்ட இதயநோய் மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தேசிய இண்டர்வென்ஷனல் கவுன்சில் 2024, கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு பிரிவு சார்பில் இருதயநோய் நிபுணர்கள் கலந்து கொள்ளும் தேசிய அளவிலான மாநாடு இன்று சென்னையில் தொடங்கியது. இதில் 1500க்கும் மேற்பட்ட இதயநோய் மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தேசிய இண்டர்வென்ஷனல் கவுன்சில் (என்ஐசி- NIC) 2024, கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு பிரிவு சார்பில் இருதயநோய் நிபுணர்கள் கலந்து கொள்ளும் தேசிய அளவிலான மாநாடு இன்று தொடங்கியது. சென்னை வர்த்தக மையத்தில் 4 நாட்கள் நடை பெறும் இந்த மாநாட்டில் 1500க்கும் மேற்பட்ட இதயநோய் மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர். சர்வதேச அள வில் புகழ்பெற்ற 25 இருதய நோய் நிபுணர்களும் உரையாற்ற உள்ளனர். இந்த மாநாடு மற்ற மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் இளம் வயது இதயநோய் மருத்துவர்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாக அமையும்.
இந்த மாநாட்டில், வெளிநாட்டில் செய்யப்பட்ட 20 சிறப்பு சிகிச்சை குறித்தும், 60 முன்னணி இருதயநோய் நிபுணர்கள் செய்த சிறப்பு சிகிச்சை குறித்தும் விளக்கக் காட்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி பயிற்சிப்பட்டறை மூலம் மருத்துவர்களுக்கான பயிற்சிகளும் அளிக் கப்பட உள்ளது. இதன் மூலம் மாநாட்டில் கலந்து கொள்ளும் இளம் மருத்துவர்களின் திறன்கள் மேம்படும் என கருதப்படுகிறது.
மேலும் இதய நோய்களின் சிகிச்சை, நடைமுறைகள் மற்றும் அதற்கான செலவுகள் பற்றிய தரவு வெளியிடப்பட இருப்பது இந்த என்ஐசி 2024 மாநாட்டின் சிறப்பம்சம் ஆகும். அடுத்ததாக இண் டர்வென்ஷனல் கார்டியாலஜி துறை கண் டுபிடிப்பாளருக்காக பிரத்யேக மையமும் தொடங்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் தலைவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் எஸ்.குருசங்கர் முன்னிலையில், சோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார்.
இதில் என்ஐசி 2024 அமைப்புத் தலைவரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இருதயநோய் நிபுணருமான டாக்டர் வி. முருகேசன் மற்றும் என்ஐசி 2024 அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இருதயநோய் நிபுணருமான டாக்டர் பி. கேசவ மூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மேலும் சிஎஸ்ஐயின் பொதுச் செயலாளர் டாக்டர் டி.பி. சின்ஹா, தலைவர் டாக்டர் பி.சி. ராத், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் சஞ்சய் தியாகி, அவர்களுடன் அறிவியல் தலைவர் டாக்டர் பி.கே. சாஹூ, தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என் பிரத £ப்குமார் சிறப்புரையாற்றுகிறார்.