fbpx
Homeபிற செய்திகள்சிறந்த சமூகப் பணிக்கான விருது

சிறந்த சமூகப் பணிக்கான விருது

இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் மாநில அளவில் கோவை மருத்துவ சங்க கூட்ட அரங்கத்தில் மருத்துவர்களுக்கும், மருத்துவத் துறை சாராத சேவை செய்யும் நபர்களுக்கும் டாக்டர். அஷ்ரஃப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324-சி மாவட்டத்தின் மகாகவி பாரதி மண்டல தலைவர் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர் ச.செந்தில்குமார், முன்னாள் மாவட்ட ஆளுநர் சாரதாமணி பழனிசாமி மற்றும் பலருக்கும் விருதுகளை இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் அபுல்ஹசன் வழங்கினார்.

மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, கோவை தலைவர் டாக்டர் ப்ரியா கார்த்திக் பிரபு, முன்னாள் மாநில தலைவர் டாக்டர் பழனிசாமி, தலைவர் தேர்வு டாக்டர் செங்குட்டுவன், தேசிய துணைத் தலைவர் டாக்டர் குணசேகரன், மாநில நிதி செயலாளர் டாக்டர் கௌரி சங்கர், மாநில உதவி செயலாளர் டாக்டர் சீதாராமன், மாவட்ட உதவி செயலாளர் டாக்டர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img