fbpx
Homeபிற செய்திகள்வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேளாண் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் 

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேளாண் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில்  கொள்ளிடம் ஆற்று உபரி நீர் திறக்கப்பட்டதால் வெள்ள  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா  வட்டாரங்களை வேளாண் இணை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ,இதனை முன்னேற்று நேற்று பரங்கிப்பேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் சிதம்பரத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார்,துணை இயக்குனர்கள் பிரேம் சாந்தி,செல்வம் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டனர்,தொடர்ந்து வட்டார திட்டப் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.பரங்கிப்பேட்டை வட்டார உதவி இயக்குனர் ச. நந்தனி,வேளாண்மை அலுவலர் வீரமணி,துணை வேளாண்மை அலுவலர் திருசிவசங்கர் உடன் இருந்தனர்

படிக்க வேண்டும்

spot_img