fbpx
Homeபிற செய்திகள்கோபி பிகேஆர் மகளிர் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்

கோபி பிகேஆர் மகளிர் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்

கோபி பிகேஆர் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இளம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் கோபி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் 70க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர். முகாமை கல்லூரி தாளாளர் பி.என். வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர். தனபால், முன்னாள் இயக்குனர், டாக்டர் ராம்குமார், அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவ அலுவலர் அரசு மருத்துவமனை கோபி, ஸ்ரீ லட்சுமி ஹோண்டா நிறுவனர், செல்வராஜ், கல்லூரி துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img