fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம். மருத்துவமனைக்கு சிறந்த புற்றுநோய் துறை மருத்துவமனை விருது

ஜி.கே.என்.எம். மருத்துவமனைக்கு சிறந்த புற்றுநோய் துறை மருத்துவமனை விருது

ஜி.கே.என்.எம். மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னோடியாக திகழ் கிறது. 66 ஆண்டுகளை கடந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
அதிதீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி காலகட்டத்தை அடைந் துள்ள நோயாளிகளுக்கு, மருத்துவ தேவைக்காக ரக்ஷா என்கின்ற மையத்தை 2001ம் ஆண்டு தொடங்கி, அதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருதுவசி கிச்சை முற்றிலும் இலவசமாககிடைக் கும் வகையில் ரக்ஷா தி ஹாஸ் பைஸ் செயல்பட்டு வருகிறது.

புற்றுநோயை முன் கூட்டியே கண்டறிவதற்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் வருடம் முழுவதும் ஒவ்வொரு வியாழன் அன்றும் பெண்க ளுக்கான இலவச மார்பகம், கருப்பைவாய் புற்றுநோய்க்கான பரிசோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில் ஜி.கே.என். எம். மருத்துவமனைக்கு நியூஸ் 18 தமிழ்நாடு நடத்திய துறை சார்ந்த சிறந்த மருத்துவமனைக்கான விருதுகள் நிகழ்ச்சியில், கொங்கு மண்டலத்திற்கான சிறந்த புற்றுநோய் துறை மருத்துவமனையாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ் நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதினை வழங்க ஜி.கே.என்.எம் மருத் துவமனையின், புற்று நோய் துறைத் தலைவர் டாக்டர்.சிவநேசன் மற்றும் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின், மருத்துவ செயல்பாடுகளின் இயக்குனர், டாக்டர்.சந்தோஷ் விருதினை பெற்றுக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img