கோவை கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் தமிழ்த்துறையின் சார் பாக பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான மாறுவேட நேற்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கல்விக் குழுமத்தின் தலைவர் ஈ.எஸ்.கதிர், செயலர் லாவண்யா கதிர் ஆகியோர் கலந்து கொண்டு பாரதியின் மொழியியல் சிந்தனைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். கற்பகம் பேசுகையில், பாரதியாரின் பெண்ணிய சிந்தனை குறித்தும், தமிழ் மொழியின் மீது அவர் கொண்டிருந்த பற்று குறித்தும், நாட்டு விடுத லைக்காக சுதந்திரம் அடை வதற்கு முன்பாகவே முற்போக்கு சிந்தனையாக ஆடுவோமே பள்ளு பாடு வோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாட்டினை எழுதி மக்கள் இடத்தில் சுதந்திர தாக் கத்தை ஏற்படுத்தியவர் பாரதியார், என்று தெரிவித்தார்.
மாணவ, மாணவிகளின் பாரதியார் வேடம் தரித்த அணிவகுப்பு காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என்று அனைவரும் கலந்து கொண்டனர். இம்மேலான நிகழ்வினை தமிழ்த் துறை அறிவியல் புலத்தின் துறைத் தலைவர் பொ. பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்தார்.