Homeபிற செய்திகள்கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்ற கூடை பந்தாட்டம்

கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்ற கூடை பந்தாட்டம்

அகில இந்திய கூடைப் பந்து போட்டி கோவையில் நேற்று மாலை 4 மணிக்கு துவங்கியது.
இதில் 57வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் பிரிவில் சென்னை வருமான வரி அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி விளையாடியது, இதில் வருமான வரி அணி 88 – 75 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

பின்னர் திருவனந்தபு ரம் – கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து புதுடெல்லி – மத்திய செயலக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 64 – 55 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

பின்னர் மூன்றாவது போட்டியில் 83 – 53 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் வங்கி அணி வெற்றது.
இதேபோல, 21வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிர் பிரிவில் திருவனந்தபுரம் – கேரளா மாநிலம் மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளை யாடியது.

இதில் கேரளா மாநிலம் மின்சார வாரிய அணி 99 – 42 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
தொடர்ந்து மகளிருக் கான போட்டிகள் நடை பெற்றது.

படிக்க வேண்டும்

spot_img