Homeபிற செய்திகள்சதுரங்க போட்டி நிறைவு

சதுரங்க போட்டி நிறைவு

தமிழ்நாடு மாநில சதுரங்க சக்கரா வல்லபநாத் சதுரங்க ராபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டிகள் ஈரோடு நவரசம் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 800 பேர் கலந்து கொண்டனர்.

பரிசளிப்பு விழாவில் சக்கரா விஷன் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர் பிரபாவதி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு ரூ.50,000 மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

இவ்விழாவில் பவுன்டேஷன் சேர்மன் சக்கரா ராஜசேகர், கல்லூரி தலைவர் தாமோதரன், செயலாளர் செந்தில்குமார், தாளாளர் கோவிந்தசாமி, பொருளாளர் பழனிச்சாமி, நவரச அகடாமி தாளாளர் அருண்பிரசாத், இணைச் செயலாளர் செல்வராஜ், மற்றும் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் மாஸ்டர் ஸ்ரீ ஜி மற்றும் செயலாளர் முனைவர் ரமேஷ் போட்டிகளை சிறப் பாக நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img