பள்ளிபாளையம் நகராட்சிக்கு எதிரே மீண்டும் புது பொலிவுடன் அம்மா சூப்பர் மார்க் கெட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி துவக்கி வைத்து பேசினார்.
“மீண்டும் பள்ளிபாளையம் பகுதியில் உதயமாகி உள்ள அம்மா சூப்பர் மார்க்கெட் மூலம் மக்களுக்கு தரமான பொருட்களும் மிக குறைவான விலையில் கிடைக்கும்.
மீண்டும் அம்மா சூப்பர் மார்க்கெட் உதயமானது போல தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். எடப்பாடியார் முதல்வர் ஆவார்” என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், தொழில்நுட்ப அணிகள், இளைஞர் பாசறை, இளம்பெண் பாசறை, சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



