இந்தியாவின் முதியோர் பராமரிப்புத் துறையில் நன்கு அறியப்பட்ட அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தால், சென்னை, பல்லாவரத்தில், புதிய அறிவாற்றல் இழப்பு நோயாளி களுக்கான பராமரிப்புச் சேவைகள் துறை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் பி.கீதா ஜீவன் பங்கேற்றார். அறிவாற்றல் இழப்பு நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், 1,000+ படுக்கை வசதிகளை உள்ளட க்கிய அதுல்யா முதியோர் பராமரிப்புக் கட்டமை ப்புகள் முழுவதும் வழங்கப்படும்.
நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜி.சீனிவாசன், கூறுகையில், அரவணைப்பு, பாதுகாப்பு மற்றும் புரிதல் நிறைந்த சூழலை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள், என்றார்.
நிறுவனரும் மேலாண் இயக்குநருமான டாக்டர் கார்த்திக் நாராயண் கூறுகையில், சிகிச்சை பெறும் அறிவாற்றல் இழப்பு நோயாளிகள் ஒவ்வொரு வருக்கும் விரிவான, தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்புத் திட்டங்களை வழங்குவதில் பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம்..
அறிவாற்றல் இழப்பு என்பது விடயங்களை மறந்துவிடுவது மட்டுமல்ல; இந்த நோய் ஒருவரின் அன்றாட செயல்பாடுகளில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியது. அவரது ஆளுமையைக் கூட இது மாற்றிவிடலாம். அதுல்யாவில் உடல், உணர்வு மற்றும் சமூகம் சார்ந்த பராமரிப்பு உட்பட முழுமையான ஆதரவை நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
எங்களின் அணுகுமுறையானது, நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்கு வதுடன், மேலதிகமாக அவர்களுடன் அன்பான உறவை உண்டாக்குதல், அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்றார்.