fbpx
Homeபிற செய்திகள்வெலிங்டனில் குழந்தைகளுக்கு கோடை கால சாகச முகாம்

வெலிங்டனில் குழந்தைகளுக்கு கோடை கால சாகச முகாம்

வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் சதர்ன் கமாண்ட் குழந்தைகளுக்கான 10 நாள் கோடை கால சாகச முகாம் நடந்தது.

இதில் 110 குழந்தைகள் பங்கேற்றனர். மலை ஏறுதல், குதிரை சவாரி, ஏர் ரைபிள், துப்பாக்கி சுடுதல், டிரெக்கிங், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு சாகசங்களில் அவர்கள் பயிற்சி பெற்றனர்.

குன்னூரில் நாய்களை கையாளுதல், காயமடைந்த விலங்குகளை பராமரித்தல், முதியோர் இல்லத்தில் தங்கி சேவை என பலவற்றில் கலந்து கொண்டனர்.

குழந்தைகளை சிறந்த மனிதனாகவும், பொறுப்புள்ள குடிமகனாகவும் மாற்றும் வகையில் சாகச உணர்வையும் சமூக விழிப்புணர்வையும் வளர்ப்பதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகாமின் ஒரு பகுதியாக குன்னூரில் துளசி அருகில் சுற்றுச்சூழல் பாதுகாப் பிற்காக மரக்கன்றுகளை நட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img