முதியோர்களுக்காக பிரத்யேக, தொழில்முறை நிபுணத்துவ பராமரிப்பு சேவையை அதுல்யா வழங்குகிறது. அதுல்யா சீனியர் கேரின் – நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஜி.சீனிவாசன் கூறியதாவது: டிரான்ஷிஷன் கேர் எனப்படும் மாறுநிலை பராமரிப்பு சேவை என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதாக மாறியிருக்கிறது.
வயது முதிர்ந்த நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களை கவனித்துக்கொள்ளும் நபர்களுக்கும் கனிவும், ஆதரவும் கொண்ட சூழலை உருவாக்குவதில் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, சேவையின் ஒருங்கிணைந்த அம்சமாக இருக்கிறது.
இச்சேவையானது, திருப்தி அளவுகளை அதிகரிக்கிறது, சிகிச்சை திட்டங்களை சிறப்பாக கடைபிடிக்கும் நிலையை ஊக்குவிக்கிறது; நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் நபர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தையும், சலிப்பையும், ஏமாற்றத்தையும் குறைக்கிறது.
தனிச்சிறப்பான மாறுநிலை பராமரிப்பு வழங்கலை வலுப்படுத்த பல கொள்கை பரிந்துரைப்புகளை அதுல்யா சீனியர் கேர் கொண்டிருக்கிறது. மாறுநிலை பராமரிப்புக்கு தரநிலைப்படுத்தப்பட்ட நெறிமுறைகளை உருவாக்குவது, உடல்நல பராமரிப்பு பணியாளர்கள் மத்தியில் வெவ்வேறு துறைகள்/பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பது மற்றும் உடல்நல சிகிச்சை வழங்குனர்களுக்கு இலக்குடன்கூடிய பயிற்சி மற்றும் கல்விக்கான வாய்ப்பை உறுதிசெய்வது ஆகியவற்றை அதுல்யா சீனியர் கேர் வலியுறுத்துகிறது.
அவசியமான ஆதாரவளங்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டிருக்கும் பிரத்யேக மாறுநிலை பராமரிப்பு அமைவிடங்களை நிறுவ வேண்டும்.
இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கு சிகிச்சை விளைவுகள் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் குறிக்கோளுடன் அதுல்யா கேர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.